

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்படும் சிலைகளை, மாவட்ட நிர்வாகங்கள் குறிப்பிடும் இடங்களில் மட்டும் கரைக்க வேண்டும் என தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், களிமண் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் மட்டும் நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என்றும்,ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாக்கோல் பொருட்களை பயன்படுத்த கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிலைகளுக்கு வர்ணம் பூசுவதற்கு நச்சு மற்றும் மக்காத இரசாயன சாயம், எண்ணெய் உள்ளிட்ட வண்ணப்பூச்சுகளை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.