ilayaraja
news
முதன்முறையாக இணைந்துள்ள இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா
‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளனர்
சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புசீவி’ திரைப்படத்தில் இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா முதன்முறையாக இணைந்து ஒரு பாடலை பாடியுள்ளதாக புகைப்படம் வௌியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. கவிஞர் பா.விஜய் வரிகளில் உருவான "அம்மா என் தங்ககனி, நீதானே எல்லாம் இனி, தாலாட்டும் பாட்டு இங்கே யார் சொல்வார்" என்ற உணர்வுபூர்வமான பாடலை இருவரும் இணைந்து பாடியுள்ளனர். பொன்ராம் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
