

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பெய்த கனமழைக்கு சாலைகள், குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், ஜோத்பூரில் அதிக பட்சமாக கடந்த வியாழன் அன்று 26 மிமீட்டர் மழை பதிவானது. அங்குள்ள நர்மதா மற்றும் சர்தார் சரோவர் அணையிலிருந்து திறக்கப்படும் அதிகப்படியான உபரி நீர் புகுந்து சாலைகள் வெள்ளக்காடாக வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தப்படியே சென்றன. மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.