இந்தியா

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி பிரபல பின்னணி பாடகி நிகிதா காந்தியின் இசைக் கச்சேரி

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் தனது மனம் உடைந்துவிட்டதாக பாடகி நிகிதா காந்தி வேதனை தெரிவித்தார்.

கேரள மாநிலம், கொச்சி பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழாவை ஒட்டி நேற்றிரவு இசைக் கச்சேரி நடைபெற்றது.

பிரபல பின்னணி பாடகி நிகிதா காந்தியின் இசைக் கச்சேரி என்பதால் நிகழ்ச்சியை ரசிக்க ஏராளமான மாணவ, மாணவியர் முண்டியடித்துக் கொண்டு முன்னேற முற்பட்டனர்.

இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 4 மாணவர்கள் உயிரிழந்த நிலையில் 64-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், ஆழ்ந்த துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்திப்பதாகவும் பாடகி நிகிதா காந்தி தெரிவித்திருக்கிறார்.

இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 மாணவர்கள் பலி  பிரபல பின்னணி பாடகி நிகிதா காந்தியின் இசைக் கச்சேரி

00 Comments

Leave a comment