தமிழ்நாடு

இலவச வீட்டு மனை வழங்கப்பட்ட இடத்தில் போராட்டம்

இலவச வீட்டு மனை வழங்கப்பட்ட இடத்தில் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே இலவச வீட்டு மனை பட்டாவிற்கு வழங்கபட்ட இடத்தை அளந்து கொடுக்க வலியுறுத்தி பட்டா பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர் உடன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கழுகுமலை அருகேயுள்ள கரடிகுளத்தை சேர்ந்த 153 பேருக்கு 1993 ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டதாகவும், ஆனால் அதற்குரிய இடத்தை அரசு முறையாக அளந்து கொடுக்காததால் அவர்கள் வீடு கட்டி குடியேற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் சிலர் அந்த இடத்தை ஆக்கிரமிக்க முயல்வதாக கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட அங்கு வந்த கயத்தாறு வட்டாட்சியர், விரைவில் நிலம் அளக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 

00 Comments

Leave a comment