இந்தியா

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் - இந்தியாவிற்கு வெள்ளி ..

உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியின் அறிமுக போட்டியிலேயே இந்திய வீராங்கனை நிஸ்செல் வெள்ளி பதக்கம் வென்றார். பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டிஜெனீரோவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை நிஸ்செல் 458 புள்ளிகள் குவித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். முதலாவது உலகக் கோப்பை போட்டியிலேயே பதக்கம் வென்று இருப்பதுடன் தகுதிச்சுற்றில் 592 புள்ளிகள் குவித்ததன் மூலம் சக வீராங்கனை அஞ்சும் மோட்ஜிலின் சாதனையையும் தகர்த்துள்ளார்.
 

00 Comments

Leave a comment