news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரு கிராம் தங்கம் ரூ.15,650
tv

Also Watch

ஒரு கிராம் தங்கம் ரூ.15,650

வெள்ளி விலையில் மாற்றமில்லை

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
today gold siver rate

சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்தது. ஒரு கிராம் தங்கம் 15 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் தங்கம், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயாகவும் தொடர்கிறது.

ஏற்ற, இறக்கத்துடன் தங்கம் விலை
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் மொத்தமாக ஒரு சவரனுக்கு ரூ.7,000 அதிகரித்தது.
ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலின் எதிரொலியாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது. இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் போது, மற்ற நாடுகள் பாதுகாப்பு முதலீடாக பங்கு சந்தைக்கு பதிலாக தங்கத்தின் மீது முதலீடு செய்வது வழக்கமானது. ஏற்கனவே பல்வேறு சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தங்கம் விலை இன்று குறைந்தது.

தொடரும் போர் பதற்றம்
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. ஒரு கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660க்கும், ஒரு சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மார்ச் 03ஆம் தேதி, ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.1,25,200க்கும், ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.15,650க்கும் விற்பனை ஆனது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 315க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனை ஆனது.

பிப்.28 தங்கம், வெள்ளி நிலவரம் (காலை)
மாத மற்றும் வார இறுதி நாளான பிப்ரவரி 28ஆம் தேதி, சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 21,600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 300 ரூபாய் விலை அதிகரித்து, மீண்டும் 15,000 ரூபாயைத் தாண்டியது. வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.



பிப்.28 தங்கம், வெள்ளி நிலவரம் (பிற்பகல்)
சென்னையில், ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு முறை உயர்ந்தது. ஒரு சவரனுக்கு 5,200 ரூபாய் விலை அதிகரித்தது. காலையில் சவரனுக்கு 2,400 ரூபாய் அதிகரித்த நிலையில் பிற்பகலில் 2,800 ரூபாய் உயர்ந்தது. ஒரே நாளில் 5,200 ரூபாய் அதிரித்ததால் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 24,400 ரூபாய்க்கு சென்றது.
ஒரு கிராம் தங்கம் 15,550 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
சென்னையில் வெள்ளி விலையும் ஒரே நாளில் இரண்டு முறை அதிகரித்தது. காலையில் 5 ரூபாய் அதிகரித்த நிலையில், பிற்பகலில் 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது.


மார்ச் 01 தங்கம், வெள்ளி விலை
சென்னையில், மார்ச் 1ஆம் தேதி ஞாயிறன்றும், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 1,800 ரூபாய் உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ஒரு லட்சத்து 26,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சென்னையில் ஒரு கிராமுக்கு 225 விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,775 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 325 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோவுக்கு 5,000 ரூபாய் உயர்ந்து 3 லட்சத்து 25,000 ரூபாயாக இருந்தது.

மார்ச்-02 தங்கம், வெள்ளி விலை
சென்னையில், ஒரு சவரன் 22 காரட் ஆபரண தங்கம், ரூ.920 குறைந்து, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.115 குறைந்து ரூ.15,660க்கு விற்பனை ஆனது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலையில், வாரத்தின் முதல் நாளான மார்ச் 2ஆம் தேதி, லேசான சரிவை கண்டது. தங்கத்தின் விலையை தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிந்தது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கும் ஒரு கிலோ 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரம்...
28.02.2026 - ரூ.1,21,600 (காலை)
28.02.2026 - ரூ.1,24,400 (பிற்பகல்)
01.03.2026 - ரூ.1,26,200
02.03.2026 - ரூ.1,25,280
03.03.2026 - ரூ.1,25,200

Related Link
யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

யார் இந்த அயதுல்லா அலி கமேனி?

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருமண மோதிரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்த ரொனால்டோ

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved