Also Watch
Read this
கடந்த திமுக ஆட்சியின் போது பள்ளி அனுமதிக்காக லஞ்சம் வாங்கப்பட்டதாக அமைச்சர் மரிய வில்சன் பகீர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆதாரப்பூர்வமாக...
சட்டசபையில் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், சென்னை தி.நகரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம், தானே லஞ்சம் கொடுத்ததாகவும், தன்னிடம் எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

அமைச்சர் மரியவில்சன் கூறுவது தவறு
இந்த நிலையில், ’லஞ்சம் கொடுத்ததாக சட்டப்பேரவையில் அமைச்சர் மரியவில்சன் கூறுவது தவறு,’ என திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக கூட்டணியில் நிலவும் சலசலப்பை திசைதிருப்பவே, சட்டமன்றத்தில் விவாதம் மடைமாற்றம் செய்யப்படுவதாக புகார் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved