அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய ஈரானின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கமேனி, அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரான் அரசே ஒப்புக் கொண்டிருப்பது, மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுத்து உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழி தீர்க்காமல் ஓயப்போவதில்லை என்று, ஈரான் சூளுரைத்த நிலையில், கமேனி வீழ்த்தப்பட காரணம் என்ன? இஸ்ரேல், அமெரிக்காவின் அடுத்தகட்ட திட்டம் தான் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம்அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டு சேர்ந்து ஈரான் மீது மூர்க்கத்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானின் ராணுவ நிலைகள், பாதுகாப்பு அமைப்புகளை குறி வைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்த, பதிலுக்கு மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் நிலைகளை குறி வைத்து கத்தார், பஹ்ரைன், குவைத், துபாய், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்தியது. இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்த நிலையில், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளது.பழிக்கு பழி தீர்க்காமல் ஓயப் போவதில்லை - ஈரான்ஈரானின் உச்சபட்ச தலைவர் கமேனியின் இருப்பிடத்தை குறி வைத்து ஏவுகணைகள் வீசப்பட்ட நிலையில், மகள், மருமகன், பேரக்குழந்தை என குடும்பத்தோடு அவர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதை அடுத்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், பழிக்கு பழி தீர்க்காமல் ஓயப் போவதில்லை எனவும் ஈரான் சூளுரைத்துள்ளது. இதனிடையே, கமேனி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பேசியுள்ள அமெரிக்கா, டிரம்ப்பை கொலை செய்ய முயற்சி நடந்ததால் கமேனியை கொலை செய்ததாக தெரிவித்திருக்கிறது. கமேனி கொல்லப்பட்ட சம்பவம் ஈரான் நாட்டு மக்களை துக்கத்தில் உறைய வைத்திருக்கிறது. கமேனிக்கு இறுதி மரியாதை செலுத்த மக்கள் சாரை சாரையாக குவிந்தனர்.ஈரான் வெறி ஆட்டம்கமேனி கொலையை அடுத்து, அமெரிக்கா மீதான தாக்குதலை ஈரான் வெறி கொண்டு தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 27 ராணுவ நிலைகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தியதாக அறிவித்த ஈரான் ராணுவம், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் தொழில் வளாகங்கள், ராணுவ கட்டுப்பாட்டு மையங்களை குறி வைத்து அழித்த்ததாக கூறியுள்ளது. கத்தார் நாட்டில் மட்டும் 11 இடங்களில் தாக்குதல் நடத்திய ஈரான், அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் மரண அடி கொடுத்து மண்டியிட்டு கெஞ்ச வைப்போம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது. அமெரிக்கா மீதான ஆத்திரத்தை பழி தீர்த்துக் கொள்ள வளைகுடா நாடுகளை குறி வைத்து ஈரான் வெறி ஆட்டம் ஆடி வருகிறது.ஈரான் சுப்ரீம் தலைவர் கமேனி யார்?இந்த நிலையில், இஸ்ரேல் - அமெரிக்காவின் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் சுப்ரீம் தலைவர் கமேனி யார்? என்ற தேடலும் அதிகரித்துள்ளது. மேற்கு ஆசிய நாடான ஈரானின் அரசியல் வரலாற்றை அயத்துல்லா அலி கமேனிக்கு முன் கமேனிக்கு பின் என்று பிரித்துக் கொள்ளலாம். ஷா அரச வம்சத்தினரின் ஆட்சியின் கீழ், ஈரான் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கித்திய கலாச்சார தன்மையில் மூழ்கவே, அரசுக்கு எதிராக போராடும் புரட்சியாளர்கள் குழுவில் இருந்தவர் தான் கமேனி. 1976ல் நிகழ்ந்த உள்நாட்டு போரில் ஷா ஆட்சி அதிகாரம் தூக்கி வீசப்பட்டு, ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடாக மாறியது. ஈரான்- ஈராக் போர் உள்ளிட்ட கொந்தளிப்பான காலகட்டங்களில் ஈரானின் அதிபராக இருந்த கமேனி, 1989ல் ஈரானின் உச்ச தலைவரானார். அன்று தொட்டு தன் கடைசி நாள் வரை அவர் தான் ஈரானின் உச்ச தலைவராக இருந்தார். சிம்ம சொப்பனமாக விளங்கியவர்ஈரானை எத்தகைய போர் சூழல் வந்தாலும், தாக்குப் பிடிக்கும் அளவுக்கு தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்பது கமேனியின் நிலையான குறிக்கோளாக இருந்தது. அதனைச் சுற்றியே ஈரானின் எல்லா செயல்பாடுகளும் கட்டமைக்கப்பட்டன. இஸ்லாமிய சட்டப்படி நடக்கும் ஆட்சியில் கமேனிக்கு நாட்டின் அரசு, நீதித்துறை, ஊடகம் என அனைத்தின் மீதும் வானளாவிய அதிகாரம் இருந்தது. ஈரானின் உயரிய தலைவராக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர். அரசு எந்தவொரு முடிவை எடுத்தாலும் அதை மாற்றி அமைக்கும் அதிகாரம் சுப்ரீம் லீடருக்கு உள்ளது. ஈரானின் எந்தவொரு முக்கிய முடிவும் அவரது ஒப்புதல் இன்றி எடுக்கப்பட்டதில்லை. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நீண்டகால எதிரியாக விளங்கிய கமேனி, ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை ஆதரித்தார். ஈரானின் அதிகாரத்தை கட்டுப்படுத்த நினைத்ததா?கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு மேலாக அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி கமேனி தலைமையில் ஈரான் அணு ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வந்தது. அதேபோல, இஸ்ரேலுக்கும் கமேனியின் இருப்பு அச்சுறுத்தலாக இருந்தது. இஸ்ரேலுக்கு எதிராக போராடும் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஹவுதி போன்ற அமைப்புகளுக்கு ஈரான் வழங்கும் ஆயுத மற்றும் நிதி ஆதரவு, இஸ்ரேலின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், அமெரிக்காவுடன் இஸ்ரேலும் கூட்டு சேர்ந்து கமேனியை கொலை செய்திருக்கிறது.இன்னொரு பக்கம், ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலுக்கு சவுதியின் அழுத்தமும் காரணம் என வாஷிங்டன் போஸ்ட் இதழ் வெளியிட்டுள்ள செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி பட்டத்து இளவரசர் சல்மான் அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் தொலைபேசியில் பேசியதாகவும் கூறப்பட்டுள்ள நிலையில், சவுதி அழுத்தம் கொடுத்தது ஏன்? ஈரானின் அதிகாரத்தை கட்டுப்படுத்த நினைத்ததா? என பல கேள்விகள் எழுந்துள்ளது. பேரழிவாக முடியும் என்பதால் கவலைஇந்தச் சம்பவம் வெறும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான மோதலாக மட்டுமல்லாமல், மூன்றாம் உலகப் போருக்கான அஸ்திவாரமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, வளைகுடா நாடுகளில் ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பதிலுக்கு அந்த நாடுகளும் ஈரான் மீது தாக்க தொடங்கினால் போர் இன்னும் விரிவடையும். இந்த விவகாரத்தில் ஈரானுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் ரஷ்யாவும், சீனாவும் கருத்து தெரிவித்திருக்க, ஈரானுக்கு ரஷ்யாவும், சீனாவும் உதவினால் நிலைமை இன்னும் சிக்கலாக மாறும் என கணிக்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, கச்சா எண்ணெய் வழித்தடத்தில் ஹார்மூஸ் ஜலசந்தி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஜலசந்தி ஈரான் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், ஜலசந்தியை மூட இருப்பதாக ஈரான் வார்னிங் கொடுத்துள்ளது. உலகின் முக்கால்வாசி கச்சா எண்ணெய் வழித்தடம் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கிறது என்ற நிலையில், அந்த பாதையை மூடினால் பெட்ரோல், டீசல் விலை எட்ட முடியாத உயரத்திற்கு செல்லும். அதோடு, அணு சக்தி நிறைந்த நாடான ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக அணு சக்தியை பயன்படுத்த முடிவு செய்தால் பேரழிவாக முடியும் என்பதால் கவலை தொற்றிக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட அனைத்து வளைகுடா நாடுகளிலும் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் லட்சக்கணக்கில் புலம் பெயர் தொழிலாளர்களாக வசித்து வரும் நிலையில், போர் சூழல் காரணமாக அவர்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. Related Link புதிய அத்தியாயம் உருவாகியுள்ளது