news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோவில்பட்டியில் பொம்மை வாங்கி விட்டு பணம் தர மறுப்பு
tv

Also Watch

tv

Read this

கோவில்பட்டியில் பொம்மை வாங்கி விட்டு பணம் தர மறுப்பு

கோவில்பட்டி, தூத்துக்குடி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தூத்துக்குடி பொம்மை பிரச்சனை

பொம்மை வாங்கி விட்டு பணம் தர மறுப்பு :

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், பொம்மை வாங்கிவிட்டு பணம் தர மறுத்து வடமாநில தம்பதியைத் தாக்கிய போதைக்கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான வடமாநிலத்தவர்கள் அப்பகுதியில் பொம்மை கடைகளை வைத்திருந்தனர். இந்த நிலையில் போதை கும்பல் ஒன்று ஒரு கடையில் பொம்மை வாங்கி விட்டு.

பணம் கேட்ட ராஜஸ்தான் மாநிலத் தம்பதியை தாக்கிவிட்டு,மேலும் பொம்மை விற்பனை செய்த பெண்ணின் மேலாடையை இழுத்து இதனை தடுக்க முயன்ற அவரது கணவரையும் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

தகவல் அறிந்து சென்ற கோவில்பட்டி போலீசார்இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், திருவிழாவில் கடைகள் போட்டிருந்த பெரும்பாலான வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இரவோடு இரவாக தங்களது
கடைகளை காலி செய்து விட்டு ரயில் மூலமாக நெல்லையை நோக்கி சென்றனர். அதிலும் அந்த பெண்மணி நடக்க முடியாமல் இரண்டு பேர் கைத்தாங்கலாக ரயிலுக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அருள்மிகு செண்பகவல்லி அம்மன் பூவன நாத சுவாமி திருக்கோவில் பங்குனித் திருவிழா கடந்த ஐந்தாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 11 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த விழாவினை ஒட்டி தமிழகம் மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பொம்மை கடைகள், பலூன் கடைகள், விளையாட்டு பொருட்கள் கடைகள் என கடைகள் போட்டு பொருட்கள் விற்பனை செய்வது
வழக்கம்.

இந்த நிலையில் நேற்று இரவு பத்துக்கு மேற்பட்ட இளைஞர்கள் கொண்ட ஒரு கும்பல் திருவிழாவில் பொம்மை கடை போட்டுருங்க ராஜஸ்தான் தம்பதியிடம், பொம்மை வாங்கி கொண்டு காசு தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

மேலும் பொம்மை விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்மணியின் மேலாடையை இழுத்தாகவும், இதனை தடுக்க முயன்ற அவரது கணவரையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது. இது குறித்த தகவல் கிடைத்தது போலீசார் வந்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் திருவிழாவில் கடைகள் போட்டிருந்த பெரும்பாலான வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இரவோடு இரவாக தங்களது கடைகளை காலி செய்து விட்டு ரயில் மூலமாக நெல்லையை நோக்கி சென்றனர்.

அதிலும் அந்த பெண்மணி நடக்க முடியாமல் இரண்டு பேர் கைத்தாங்கலாக ரயிலுக்கு அழைத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அந்த வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில் பொம்மை வாங்கிவிட்டு பணம் தர மறுத்து தம்பதியை தாக்கியதாகவும். அவர்கள் மது போதையில் இருந்ததாகவும், காவல்துறையில் சொல்லி இருக்கிறோம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறோம்.

ஊர் ஊராக சென்று பிழைப்பு நடத்தும் எங்களுக்கு பிரச்சனை எதுவும் வந்து விடக்கூடாது என்பதற்காக இங்கிருந்து செல்வதாக கூறினார் வழக்கமாக திருவிழா முடிந்த பிறகும் ஒரு வார காலம் கோவில்பட்டி நகரில்
தங்கியிருந்து வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது பொருட்களை விற்பனை செய்வது வழக்கம். இந்த பிரச்சனை காரணமாக முன்கூட்டியே ஊருக்கு கிளம்பி விட்டனர்.

காவல்துறையிடம் கேட்டபோது இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Related Link
வானதி சீனிவாசனிடம் நலம் விசாரித்த டெல்லி முதலமைச்சர்

வானதி சீனிவாசனிடம் நலம் விசாரித்த டெல்லி முதலமைச்சர்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 5 mins agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved