Also Watch
Read this
By: Manigandan Raja

BCCI-யில் புகாரளித்த CSK :
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, மைதானத்தில் இசைக்கப்பட்ட பாடல் தங்களை அவமதிக்கும் வகையில் இருந்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) நிர்வாகம் பிசிசிஐ-யிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் போது, சென்னை அணி வீரர்கள் களமிறங்கிய சமயத்தில், தென்னிந்தியர்களை கிண்டல் செய்யப் பயன்படுத்தப்படும் "தோசை, இட்லி, சாம்பார், சட்னி..." என்ற பின்னணி பாடலை மைதானத்தின் டிஜே ஒலிக்கச் செய்துள்ளார்.

இது போன்ற செயல்கள் தரமற்றவை என்றும், உள்நோக்கம் கொண்டவை என்றும் சிஎஸ்கே நிர்வாகம் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கே நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன், பொதுவாக உள்ளூர் அணிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் டிஜேக்கள், பெங்களூரு மைதானத்தில் வரம்பு மீறி செயல்பட்டதாக அதிருப்தி வெளியிட்டார்.
சென்னை அணியின் இந்த புகாரைப் பெற்றுக்கொண்ட ஐபிஎல் நிர்வாகக் குழு, இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்துள்ளது. கிரிக்கெட் மைதானத்தில் கலாச்சார ரீதியான கிண்டல்கள் அரங்கேறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.