news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home sportsnews தமிழகத்தின் ஆர் வைஷாலி பட்டம் வென்று சாதனை
tv

Also Watch

tv

Read this

தமிழகத்தின் ஆர் வைஷாலி பட்டம் வென்று சாதனை

வைஷாலி

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
விளையாட்டு செய்திகள்

தமிழகத்தின் ஆர் வைஷாலி பட்டம் வென்று சாதனை :

கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆர் வைஷாலி பட்டம் வென்றுள்ளார். சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் ரஷியா நாட்டை சேர்ந்த கேத்ரினா லாக்னோவை வீழ்த்தி ஆர் வைஷாலி அசத்தினார்.

செர்பிய வீரர் ஹமத் மெட்ஜ்டோவிக் காலிறுதிக்கு தகுதி :

பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடரின், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் செர்பிய வீரர் வெற்றிபெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், செர்பியாவின் ஹமத் மெட்ஜ்டோவிக் ஆகியோர் மோதினார். இதில், சிறப்பாக விளையாடிய செர்பிய வீரர் 6-க்கு 3, 6-க்கு 4 என்கிற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வென்றார்.

UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா அணி தோல்வி :

UEFA சாம்பியன்ஸ் லீக் தொடரில் பார்சிலோனா அணி தோல்வியை தழுவிய நிலையில், நடுவர்களின் மோசமான தீர்ப்புகளினால் தோல்வியுற்றதாக அந்த அணியின் நட்சத்திர வீரர் ரஃபீனியா விமர்சித்துள்ளார். போட்டியின் 79-ஆவது நிமிஷத்தில் ரெட் கார்டு வழங்கப்பட்டது மற்றும் பார்சிலோனா அணிக்கு தர வேண்டிய எந்த நியாயமான முடிவுகளையும் அளிக்க முடியவில்லை என பலரும் குற்றம்சாட்டினர்.

தன்னம்பிக்கை சற்று கூடியிருப்பதாக பிரேவிஸ் மகிழ்ச்சி :

சென்னையில் ரசிகர்களுக்கு முன் விளையாடியது மிகவும் அருமையாக இருந்ததாகவும், அவர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியதை மிகவும் ரசித்ததாகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிரேவிஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது குறித்து பேசிய அவர், சென்னை ரசிகர்கள் முன் விளையாடியது சற்று தன்னம்பிக்கை கூட்டியிருப்பதாகவும், தான் வலிமையாக உணர்வதாகவும் கூறினார்.

5 விக்கெட் வித்தியாசத்தில் LSG அணியை வீழ்த்திய RCB :

ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் தொடரின் 23-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் விளையாடிய லக்னோ அணி 146 ரன்கள் ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து களமிறங்கிய ஆர்.சி.பி. அணி, 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Link
சிஎஸ்கே-க்கு தாமதமாக வெற்றி கிடைத்துள்ளது

சிஎஸ்கே-க்கு தாமதமாக வெற்றி கிடைத்துள்ளது



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வென்றது

4
23 mins agoshare
தவெக அரசு வென்றதுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved