Also Watch
Read this
By: Manigandan Raja

சஞ்சு சாம்சனுக்கு ஐசிசி-யின் மார்ச் மாத சிறந்த வீரர் விருது :

ஐசிசியின் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு, டி20 உலகக் கோப்பையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியாவின் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதே போல் மார்ச் மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக நியூசிலாந்து கேப்டன் மெலியா கெர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷை முந்திய சஞ்சு சாம்சன் :

சிஎஸ்கே வீரர் சஞ்சு சாம்சன் இன்ஸ்டாகிராமில் கீர்த்தி சுரேஷை முந்தி, அதிக பாலோயர்ஸ்களை கொண்ட கேரளத்தை சேர்ந்த பிரபலம் என்ற சாதனையை படைத்துள்ளார். டி20 உலகக் கோப்பைக்கு முன்பு இன்ஸ்டாவில் அவருக்கு 1.4 கோடி பாலோயர்கள் மட்டுமே இருந்த நிலையில், உலகக் கோப்பையில் அவரது சிறப்பான ஆட்டத்தால் 1.78 கோடியாக உயர்ந்த பாலோயர்கள் எண்ணிக்கை தற்போது ஒரு கோடியே 90 லட்சமாக அதிகரித்துள்ளது.
டி-20 அணியின் கேப்டனாகும் ஸ்ரேயஸ் ஐயர் :

ஐபிஎல் தொடருக்குப் பின் அயர்லாந்துக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயஸ் ஐயர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி-20 உலகக் கோப்பையை வென்ற போதிலும், அவர் பேட்டிங்கில் சொதப்பியதால் கேப்டன் பதவி பறிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
BBL போட்டிகளை சென்னையில் நடத்த திட்டம் :
2027 ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆஸ்திரேலியாவில் நடத்த அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அதே போன்று அங்கு நடைபெறும் Big Bash League போட்டிகளை சென்னையிலும் நடத்த ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. இருப்பினும் பிசிசிஐ தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
"சிஎஸ்கே-க்கு தாமதமாக வெற்றி கிடைத்துள்ளது" :
5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்க்ஸ்க்கு வெற்றி தாமதமாக கிடைத்துள்ளதாக கொல்கத்தா அணிக்கு எதிரான வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியை தொடர்ந்து கொல்கத்தா அணியையும் வீழ்த்தியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறினார்.
கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி 2ஆவது வெற்றி :
ஐபிஎல் தொடரில் 22ஆவது லீக் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சென்னை அணி, தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா 20 ஓவர் முடிவில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை சேர்த்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved