news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news தவெக தேர்தல் வாக்குறுதிகள் - முழு விவரம்
tv

Also Watch

tv

Read this

தவெக தேர்தல் வாக்குறுதிகள் - முழு விவரம்

ஒரு குடும்பத்திற்கு இவ்ளோ லட்சமா?

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

60 வயதுக்குட்பட்ட மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என தவெக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம், ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் எனவும் விஜய் உறுதி அளித்துள்ளார்.

தவெக தேர்தல் அறிக்கை
2026 தவெக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளின் விவரம்;
* 60 வயதிற்கு குறைவாக உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்
* அன்னபூரணி சூப்பா் சிக்ஸ் திட்டத்தின் மூலம் ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டா் இலவசமாக வழங்கப்படும்

ஒரு சவரன் தங்கம், பட்டுப்புடவை
* அரசு பள்ளி மாணவா்களின் இடைநிற்றலை தடுக்க ஒன்று முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் தாய்மாா்களுக்கு ஆண்டுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.15,000 வழங்கப்படும்
* ஏழைப்பெண்களின் திருமணத்திற்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை வழங்கப்படும்

ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ்
* தமிழ்நாடு முழுவதும் 100 காமராஜர் பள்ளிகள் அமைக்கப்படும்
* இளங்கலை முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பிணையில்லா கடன் வழங்கப்படும்
* ஒவ்வொரு குடும்பத்திற்கும் உலகத்தர அளவிலான சிகிச்சை அளிக்கும் வகையில் ரூ.25 லட்சம் இன்சூரன்ஸ்

TamilNadu Citizen privilege card
* அரசு போக்குவரத்துக்கழக அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம்
* அனைத்து நலத்திட்டங்களையும் எளிதாக பெற ஒவ்வொரு
குடும்பத்திற்கும் TamilNadu Citizen privilege card திட்டம்
* Citizen privilege card மூலம் அரசின் அனைத்து நலத்திட்ட உதவியும் லஞ்சமில்லாமல் நேரடியாக மக்களை சென்றடையும்

பட்டதாரிகளுக்கு நிவாரணம்
* அனைத்து அரசு சேவைகளையும் ஒரே தளத்தில் வழங்கும் Vetri TN Super App உருவாக்கப்படும்
* பட்டம் முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாாிகளுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.4,000 வழங்கப்படும்
* டிப்ளமோ முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாாிகளுக்கு வேலையில்லா கால நிவாரணமாக ரூ.2,500 வழங்கப்படும்

5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
* தமிழ்நாட்டில் உள்ள தனியாா், பொதுத்துறை நிறுவனங்களில் தமிழா்களுக்கு 75% வேலை தரும் வகையில் சட்டம் இயற்றப்படும்
* கல்வி நிறுவனங்களை சுற்றி போதைப்பொருள் தடுப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்
* ரூ.18,000 ஊதியத்தில் 5 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்

100 சதவீதம் பயிா் பாதுகாப்பு
* 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகள் வேளாண் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்
* 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு விவசாய கடன் 50% தள்ளுபடி செய்யப்படும்
* பயிா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 சதவீதம் பயிா் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்

200 யூனிட் மின்சாரம் இலவசம்
* அனைத்து மீனவா்களுக்கும் வீடு கட்டித்தரும் லட்சிய வீடு திட்டம் செயல்படுத்தப்படும்
* ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாதந்தோறும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்
* அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்கப்படும்
* அங்கன்வாடி ஊழியா்களின் மாத ஊதியம் ரூ.18,000 ஆக உயா்த்தப்படும்

AI பல்கலை, AI நகரங்கள்
* ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் செவிலியா்கள், ஆசிாியா்கள் பணி நிரந்தம் செய்யப்படுவா்
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்யேகமான ஒரு மாஸ்டா் பிளான்: AI பல்கலை, AI நகரங்கள் உருவாக்கப்படும்
* சாதி சான்றிதழ் உள்ளிட்ட எந்த ஆவணமாக இருந்தாலும் 21 நாளில் கிடைக்க வழிவகை செய்யப்படும்
இவ்வாறு தவெக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

Related Link
தனது தகுதி தான் குறையும் - காட்டமாக பேசிய முதலமைச்சர்

தனது தகுதி தான் குறையும் - காட்டமாக பேசிய முதலமைச்சர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமர்சனங்களால் உடைந்து போன விக்னேஷ் சிவன்

1
32 mins agoshare
சினிமா செய்திகள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved