இந்தியா

கனடாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

கனடாவில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலி

கனடாவின் தெற்கு எட்மண்டன் நகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவர்களில் ஒருவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த கட்டுமான நிறுவன அதிபர் பூட்டா சிங் கில் என்பது தெரிய வந்துள்ளது. தென்மேற்கு எட்மண்டன் நகரில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடத்தில், கட்டுமான தொழிலாளி உடையணிந்த நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக, சம்பவத்தை நேரில் பார்த்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

00 Comments

Leave a comment