Trump
Trump

அமெரிக்கா, டிரம்ப் ஒழிக என கோஷமிட்ட இந்தியர்... நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் கோஷம்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் அமெரிக்கா ஒழிக, டிரம்ப் ஒழிக என முழக்கங்களை எழுப்பிய இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி பயணி கைது செய்யப்பட்டார்.
Published on: 

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் அமெரிக்கா ஒழிக, டிரம்ப் ஒழிக என முழக்கங்களை எழுப்பிய இங்கிலாந்தை சேர்ந்த இந்திய வம்சாவளி பயணி கைது செய்யப்பட்டார்.

லண்டன் Luton விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் பயணித்த நாயக் என்பவர், குண்டு போடுவேன் என மிரட்டியவாறு கோஷமிட்டதாக கூறப்படும் நிலையில் பயணிகள் பீதியடைந்தனர்.

மேலும் மதம், மற்றும் அரசியல் தொடர்பான கோஷங்களையும் அவர் எழுப்பியதாக தெரிகிறது.

அப்போது அவர் கோஷமிடுவதை சக பயணிகள் தடுத்து நிறுத்தி தரையில் படுக்க வைத்து பிடித்துக் கொண்டனர்.

இதனை தொடர்ந்து அவருக்கு ஒரு வாரம் வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

newstamil.tv