

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மும்பை அணியை வீழ்த்தி பெங்களூரு எப்.சி. அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி, 5 கோல்கள் அடித்தது.
ஆனால் கடைசி வரை போராடியும் மும்பை அணியால் கோல் அடிக்கவில்லை.
முடிவில் பெங்களூரு அணி 5 -க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.