Rashid Khan
Rashid Khan

ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக சிக்சர்கள் வழங்கிய வீரர்... அதிக சிக்சர்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனை

ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக சிக்சர்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.
Published on: 

ஐ.பி.எல். போட்டியில் ஒரு சீசனில் அதிக சிக்சர்களை விட்டுக்கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை ரஷித் கான் படைத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற மும்பைக்கு எதிரான எலிமினேட்டர் ஆட்டத்தில் குஜராத் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 4 ஓவர்கள் வீசி 2 சிக்சருடன் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

இதன் மூலம் நடப்பு தொடரில் அவர் இதுவரை 33 சிக்சர்களை வாரி வழங்கி இருக்கிறார்.

இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் முகமது சிராஜ் தனது பந்து வீச்சில் 31 சிக்சர்கள் வழங்கியதே அதிகபட்சமாக இருந்தது

newstamil.tv