Jaishankar
Jaishankar

கால்வன் தாக்குதலுக்கு பிறகு முதன் முறையாக சீன பயணம்... சீனாவுக்கு அரசுமுறை பயணம் சென்றுள்ள ஜெய்சங்கர்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
Published on: 

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவை விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதனால் மட்டுமே இரு தரப்பு நலன்கள் பாதுகாக்கப்படும் என அவர் கூறினார்.

சீனாவுக்கு சென்றுள்ள ஜெய்சங்கர், பெய்ஜிங்கில் சீன துணை அதிபர் Han Zheng ஐ சந்தித்து இருதரப்பு உறவு பற்றி விவாதித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர் இந்தியாவும் சீனாவும் இருபெரும் பொருளாதாரங்கள் என்றார்.

இரு நாடுகளின் கூட்டுறவு மிகவும் முக்கியமானது என கூறினார்.

2020 ல் கிழக்கு எல்லையில் உள்ள கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய-சீன துருப்புகள் மோதிக் கொண்ட பின்,

முதன் முறையாக இந்திய வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstamil.tv