கிருஷ்ணகிரி
news
கே.ஆர்.பி. அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.. கே.ஆர்.பி. அணையின் நீர்வரத்து 2,587 கன அடியாக உயர்வு
கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கனமழை காரணமாக கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால், கே.ஆர்.பி. அணையின் நீர்வரத்து 2 ஆயிரத்து 587 அடியாக அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கே.ஆர். பி. அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரத்து 835 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனிடையே, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 3 மாவட்ட கரையோர மக்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கை 3வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

