வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.. மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.. மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள கடிதம்
Published on: 

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆகஸ்ட் 23 அன்று கோடியக்கரைக்கு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகையை சேர்ந்த 11 மீனவர்கள் மற்றும் அவர்களது விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக சுட்டிகாட்டியுள்ள முதலமைச்சர் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

newstamil.tv