

தூத்துக்குடியில் நெய்தல் புத்தகத் திருவிழா மற்றும் கலைத் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்காக "நம்ம STREET" "வாழ்விடத்தின் விழா" என்ற கலை நிகழ்ச்சி பரதநாட்டியம், விளையாட்டு போட்டிகள், திரைப்பட பாடல்களின் குதூகல ஆட்டத்துடன் கோலாகலமாக நடைபெற்றது.
பரத நாட்டியம், சிலம்பாட்டம், பறை இசை, டிரெண்டிங் சாங்ஸ், லேட்டஸ்ட் சினமா சாங்ஸ் என குதூகல நடனங்களுடன் நடைபெற்ற "நம்ம STREET வாழ்விடத்தின் விழா" என்ற கலை நிகழ்ச்சி தூத்துக்குடி இளைஞர், இளம்பெண்களை சும்மா அதிரவிட்டது.
தூத்துக்குடி நெய்தல் புத்தகத் திருவிழா மற்றும் கலைத் திருவிழா அக்டோபர் மூன்றாம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சங்கரபேரி திடலில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடி சிதம்பர நகர் பிரதான சாலையில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்காக "நம்ம STREET" "வாழ்விடத்தின் விழா" கலை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் உள்ளிட்டோருடன் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சி தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
பின்னர் சிறுமிகளின் பரத நாட்டியம் பார்வையாளர்களை பரவசப்படுத்த, சிறுவர், சிறுமியரின் சிலம்பாட்டம், லக்கி வீல், பறை இசை போன்றவை உற்சாகத்தை வரவழைத்தது..... GOAT திரைப்படத்தின் Whistle
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி திரைப்பட பாடல்களுக்கும் மேடையில் கலைஞர்கள் செமத்தியான ஸ்டெப் போட்டு ஸ்டைலாக ஆட்டம் போட... உற்சாக மிகுதியில் பார்வையாளர்கள் கத்திக் கூச்சலிட்டு கைகளை தூக்கி ஆரவாரம் செய்தும், கைகளில் செல்போனில் டார்ச் லைட்டை அடித்தபடி ஆடிப்பாடியும் கூட்டத்தை அதிர விட்டனர்.