

ஆந்திராவில் உதவியாளரை காலணியால் சரமாரியாக தாக்கிய காவல் ஆய்வாளரின் வீடியோ காட்சி வெளியாகியது.
அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கல்யாணதுர்கம் காவல் ஆய்வாளர் ஹசீனா பானு, தனது பெயரை பயன்படுத்தி சட்டவிரோத மது விற்பனையில் இருந்து பணம் வசூலித்ததாக கூறி அவரது உதவியாளரை காலணியால் கன்னத்தில் அறைந்தார்.
தனக்கு எதுவும் தெரியாது என்று உதவியாளர் கூறிய நிலையிலும், அதனை கேட்காமல் காவல் ஆய்வாளர் காலணியால் தாக்கிய சம்பவத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.