அரசியல்

France-ல் திருவள்ளுவர் சிலை.. தமிழ் இந்தியாவில் இருப்பது பெரிய பெருமை - PM Modi பெருமிதம் |

பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு...இந்தியாவிற்கு பெருமைமிக்க தருணமாக இருக்கும் என்றும் நெகிழ்ச்சி.
உலகின் தொன்மையான மொழியான தமிழ் இந்தியாவில் இருப்பதை விட வேறென்ன பெரிய பெருமை இருக்க முடியும் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றினார். பாரத் மாதா கீ ஜெய் என்ற கோஷத்தை கேட்கும் போது சொந்த நாட்டில் இருப்பதை போல் உணர்வதாக கூறிய பிரதமர், வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்யும் என கூறினார். மேலும், பிரான்சில் யுபிஐ மூலம் இந்திய ரூபாயில் பரிவர்த்தனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் எனவும் அது இந்தியாவுக்கு பெருமை என்றும் என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

00 Comments

Leave a comment