பிரவீன் சக்ரவர்த்தியின் அதிக பிரசங்கித்தனம், மார்க்சிஸ்ட் கண்டனம்
பிரவீன் சக்ரவர்த்தியின் அதிக பிரசங்கித்தனம், மார்க்சிஸ்ட் கண்டனம்

பிரவீன் சக்ரவர்த்தியின் அதிக பிரசங்கித்தனம், மார்க்சிஸ்ட் கண்டனம்

பிரவீன் சக்ரவர்த்தி பதிவிட்டிருப்பது அதிக பிரசங்கித்தனம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது.
Published on: 

தவெக கூட்டணியில், தங்களையும் இணைத்து பிரவீன் சக்ரவர்த்தி பதிவிட்டிருப்பது அதிக பிரசங்கித்தனம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. தவெக ஆட்சி அமைக்க எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்தோம் என்பது ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டு விட்டதாகவும் சண்முகம் பதிவிட்டு உள்ளார்.

சண்முகம் பதிவு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
புதிய கூட்டணியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக, தான் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும், அதில், மார்க்சிஸ்ட் பெயரையும் குறிப்பிட்டு இருப்பது தவறானது. கூட்டணி அமைப்பது குறித்தோ, இந்த வேட்பாளருக்கு ஆதரவு கேட்டோ யாரும் எங்களை அணுகவோ, ஆலோசிக்கவோ இல்லை. தவெக ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதன் அடிப்படையில் ஆதரவு தெரிவித்து உள்ளோம் என்பது ஏற்கெனவே தெளிவாக கூறப்பட்டு உள்ளது. பிரவீன் சக்கரவர்த்தியின் பதிவை ‘அதிகப் பிரசங்கித்தனம்’ என்று தான் சொல்ல வேண்டும்.
இவ்வாறு சண்முகம் பதிவிட்டு உள்ளார்.

என்ன கூறி இருந்தார் பிரவீன்?
தவெக, காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளை குறிப்பிட்டு ‘தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி’ என பிரவீன் சக்கரவர்த்தி சமூக வலை தளத்தில் பதிவிட்டிருப்பது பேசு பொருளாகி உள்ளது.

சமூக வலை தள சர்ச்சை
இதுகுறித்து பிரவீன் சக்கரவர்த்தி கூறி இருப்பதாவது;
தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு (தவெக+காங்கிரஸ் + விசிக + ஐயூஎம்எல் +சிபிஐ+சிபிஎம்) கூட்டணியின் முதல் எம்.பி. வேட்பாளராக தேர்ந்து எடுக்கப்பட்டதை பெருமையாகவும் பெரும் பொறுப்பாகவும் கருதுகிறேன்.
என் மீது நம்பிக்கை வைத்த ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் விஜய்க்கு மனமார்ந்த நன்றி. தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, இந்திய நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் துணிச்சலான, விசுவாசமான மற்றும் நேர்மையான குரலாக ஒலிப்பேன் என்று லட்சக்கணக்கான கூட்டணித் தொண்டர்களுக்கு உறுதி அளிக்கிறேன்
இவ்வாறு பிரவீன் சக்ரவர்த்தி பதிவிட்டு உள்ளார்.

newstamil.tv