

தேனி மாவட்டம் தேக்கம்பட்டி கிளைச் சிறையில் இருந்து தப்பிய 17 கைதிகளில் நால்வர் சிக்கினர். கொ*, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடையவர்கள் தப்பியதால் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
கைதிகளை தேடி அலையும் தனிப்படை
தேனி கிளைச் சிறையில் இருந்து தப்பியக் கைதிகளை தேடும் தனிப்படைகள், அண்டை மாவட்டங்கள், ஆண்டிப்பட்டி கணவாய், பேருந்துகள், கார்கள், ரயில்களில் தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர்.
கேரளத்திலும் உஷார் நிலையில் போலீஸ்
தேனி மாவட்டம், தேக்கம்பட்டி கிளைச் சிறைக் கைதிகள் தப்பியது குறித்த தகவல் கேரள அரசுக்கும் பரிமாறப்பட்டு உள்ளது. எல்லைப் பகுதி என்பதால் அம்மாநில காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரிகள் ஆய்வு
கைதிகள் தப்பிய விவகாரம் தொடர்பாக தேக்கம்பட்டி சிறையில் காவல் உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து ஆய்வு மேற்கொண்டனர்.
சிறைக் கைதிகள் தப்பியது எப்படி? என மதுரை சிறைத்துறை டிஐஜி முருகேசன் நேரில் சோதனையில் ஈடுபட்டார்.
தப்பிய கைதிகள் - 9 பேர் சஸ்பெண்ட்
தேனியில் கைதிகள் தப்பிய விவகாரத்தில் 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். தேக்கம்பட்டி சிறை வார்டன் உள்ளிட்ட காவலர்கள் 9 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.