

காங்., - திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். ராகுல்காந்தி வருகையையொட்டி 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
"தமிழ் மக்களுக்கு சிறப்பு இடம்"
தமிழ்நாட்டு மக்களுக்கு என் இதயத்தில் சிறப்பு இடம் உண்டு; தமிழ்நாட்டு மக்கள் மீதும், தமிழ் மீதும் எனது அளவு கடந்த அன்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது நான் தமிழ்நாட்டில் பிறக்காவிட்டாலும் எனது குடும்பம் இங்கு இல்லாவிட்டாலும் எனது உணர்வு இங்கு ஒன்றியிருக்கிறது
திருவள்ளூர், பெருஞ்சேரியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
“தோற்கடித்துவிட்டோம்”
மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு விட்டது; மகளிர் இடஒதுக்கீட்டிற்கு பின்னால் தொகுதி மறுவரையறையை மறைத்து வைத்து மசோதாவை கொண்டு வந்தார்கள்.
நாடாளுமன்றத்தில் தமிழக பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி செய்த மசோதாவை தோற்கடித்துவிட்டோம், ராணுவத்தை பயன்படுத்தாமல் போர் செய்கிறது மத்திய அரசு. தமிழ் மொழி, கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு
இவ்வாறு காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி உரை நிகழ்த்தி, வாக்கு சேகரித்தார்.