damage
news
மழை வெள்ளத்தில் மூழ்கிய சம்பா, தாளடி பயிர்கள்
5000 ஏக்கர் சம்பா, தாளடி நெற் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது
நாகை மாவட்டத்தில் பெய்த கன மழையால், தலைஞாயிறு சுற்று வட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கரிலான சம்பா, தாளடி நெற் பயிர் மழை நீரில் மூழ்கியது. ஐந்து நாட்களாகியும் மழை நீர் வடியாமல் பயிர்கள் அழுகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தலைஞாயிறு ஒன்றியத்தில் சுமார் 11 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சில தினங்களாக பெய்து வரும் மழையால் பயிர்கள் நீரில் மூழ்கின.
வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததே இதற்கு காரணம் என குற்றம் சாட்டிய விவசாயிகள், வேளாண் அதிகாரிகள் கணக்கீடு செய்து பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோரிக்கை விடுத்துள்ளனர்.
