ரம்ஜான் பண்டிகை.. இஸ்லாமியர்களுக்கு இலவச ரமலான் கிட் சிறப்பு தொகுப்பு
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு இலவச ரமலான் கிட் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட திமுக சார்பில், இஸ்லாமியர்களுக்கு ரம்ஜானை முன்னிட்டு ரமலான் கிட் வழங்கும் விழா அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய அமைச்சர், சிறுபான்மை மக்களாகிய நீங்கள் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
உங்களோடு உங்களுக்காக குடும்பத்தில் ஒருவனாகவும், சகோதரனாகவும் தம்பிகளாகவும் நாங்கள் இருப்போம். உங்களுடன் பயணித்து உறுதியாக உங்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றி தருவோம் எனவும் பேசினார்.
பின்னர் விழாவில் கலந்து கொண்ட 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு பிரியாணி அரிசி, மளிகை பொருட்கள், நெய் அடங்கிய இலவச ரமலான் கிட் சிறப்பு தொகுப்புகளை வழங்கி அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

