

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ராணுவ பட்ஜெட்டிற்கு 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
துணை பட்ஜெட் மூலம் வழங்கப்படும் இந்த நிதியை தொடர்ந்து ஒட்டுமொத்த ராணுவ பட்ஜெட் 7 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூடுதல் நிதி ஒதுக்கீடு ஆயுதப்படைகளின் தேவைகள், அத்தியாவசிய கொள்முதல்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.