

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருச்சூரில் ஓடும் ரயில் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சூர் மாவட்டம் செருதுருத்தி ((Cheruthuruthy )) ரயில்வே பாலம் அருகே இருந்த மரம் ஓடும் ரயில் மீது விழுந்த நிலையில்,
சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
கோழிகோட்டில் தென்னை மரம் சாய்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 64 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு சூரல்மலை, முண்டக்கை வழியாக ஓடும் புன்னபுழா ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால்,
அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.