தமிழ்நாடு

இறுதி போட்டிக்கு நுழைந்த பிரக்ஞானந்தா ..இறுதியில் கார்ல்சனுடன் மோதும் பிரக்ஞானந்தா | Praggnanandhaa

உலக கோப்பை செஸ் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஃபேபியானோ கருணாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்தார். அஜர்பைஜான் நாட்டின் பாகு நகரில் உலக கோப்பை செஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார். இதில் முதல் இரு ஆட்டங்கள் 'டிரா' ஆனதால் டை ப்ரேக்கர் சுற்று நடத்தப்பட்டதில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5 க்கு 2.5 என்ற புள்ளிகளில் வீழ்த்தினார். இதன் மூலம் பிரக்ஞானந்தா இறுதிப் போட்டியில் மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.

00 Comments

Leave a comment