தமிழ்நாடு

கொடைக்கானல் டிப்போ பகுதியில் முகாமிட்ட காட்டெருமை

கொடைக்கானல் டிப்போ பகுதியில் முகாமிட்ட காட்டெருமை

கொடைக்கானல் டிப்போ பகுதியில் முகாமிட்ட காட்டெருமை திடீரென தாக்கியதில், 17 வயது சிறுவன் படுகாயமடைந்தான். கொடைக்கானலில் கடந்த சில மாதங்களாக காட்டெருமைகள் நகர் பகுதியில் வலம் வருவதும், குடியிருப்பு பகுதிகளில் முகாமிடுவதும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் டிப்போ பகுதியில் முகாமிட்ட காட்டெருமை ஒன்று, அருகிலுள்ள தேநீர்க்கடையில் நின்றிருந்த ரியாஜ் என்ற சிறுவனை வயிற்று பகுதியில் பலமாக முட்டி தாக்கியது. அதில் குடல் சரிந்து படுகாயமடைந்த சிறுவனை, அக்கம்பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மேல்சிகிச்சைக்காக சிறுவன் தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
 

00 Comments

Leave a comment