ரஷ்யா நம்பிக்கை : ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தி விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதற்கு பதிலளித்துள்ள ரஷ்யா, தனது நட்பு நாடான இந்தியா இப்படி ஒரு முடிவை எடுக்கும் என நம்ப எந்த காரணமும் இல்லை என தெரிவித்துள்ளது. மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஸாக்கரோவா, இந்தியா தங்களிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாது என திட்டவட்டமாக கூறினார். இந்தியா போன்ற ஒரு நாடு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என டிரம்ப் ஆணையிட முடியாது என்ற அவர், ரஷ்ய எண்ணெயை வாங்குவதால் இந்தியாவும், ரஷ்யாவும் பரஸ்பரம் பலன் அடைந்து வருவதாகவும் தெரிவித்தார். இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகி விட்டதாக கடந்த 2 ஆம் தேதி அறிவித்த டிரம்ப்,இந்தியா மீது விதிக்கப்பட்ட வரியை 18 சதவிகிதமாக குறைப்பதாகவும், ரஷ்ய எண்ணெயை வாங்க மாட்டோம் என பிரதமர் மோடி தன்னிடம் கூறியதாகவும் கூறினார். Related Link அரசு பேருந்து டயர் வெடித்து சரக்கு வேனின் மீது மோதியது