Drones
Drones

"ட்ரோன்ஸ்" திரைப்படத்தை பாராட்டி நட்டி நட்ராஜ் வீடியோ

ஆரம்பத்தில் சில சவால்களை சந்தித்தாலும், பின்னர் ரசிகர்களின் பாராட்டு மூலம் படம் வரவேற்பை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
Published on: 

இளம் படக்குழுவினரின் துணிச்சலான முயற்சிக்கு பாராட்டு

  • "ட்ரோன்ஸ்" திரைப்படத்தை பாராட்டி, நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், இளம் படக்குழுவினரின் துணிச்சலான முயற்சிக்கு கிடைத்துவரும் வரவேற்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், "சதுரங்க வேட்டை" திரைப்படத்தை வெளியிட்டபோது ஏற்பட்ட அனுபவம் தற்போது நினைவுக்கு வருவதாகவும், ஆரம்பத்தில் சில சவால்களை சந்தித்தாலும், பின்னர் ரசிகர்களின் பாராட்டு மூலம் படம் வரவேற்பை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

மம்முட்டி நடித்துள்ள "பாதயாத்திரா" திரைப்படம்

  • மம்முட்டி நடித்துள்ள ‘பாதயாத்திரா’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை மம்முட்டியே தயாரித்துள்ளார்.
  • இந்த படத்தில் இந்திரன்ஸ், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலை கிராமத்தில் மருத்துவராக பணிபுரியும் மம்முட்டிக்கும், கிராம மக்களுக்கும் இடையேயான உறவை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.
newstamil.tv