18
18

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக புறநகர் ரயில்சேவை ரத்து.. கவரைப்பேட்டை- கும்மிடிப்பூண்டி இடையே ரயில் சேவை ரத்து

ரயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இருந்து கவரைப்பேட்டை - கும்மிடிப்பூண்டி இடையே மே 31 மற்றும் ஜூன் 2 ஆகிய தேதிகளில் செல்லக்கூடிய புறநகர் மின்சார ரயில் சேவை முழுமையாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Published on: 

அதற்கு பதிலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலானது, சென்னை கடற்கரை முதல் கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரம் ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

மேலும், கும்மிடிப்பூண்டியில் இருந்து தாம்பரம் செல்லும் புறநகர் ரயிலானது கும்மிடிப்பூண்டி மற்றும் கடற்கரை இடையே பகுதி நேரம் ரயில் சேவை ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

newstamil.tv