8
news
காளான் வளர்ப்பை வேளாண் செயல்பாடாக தமிழக அரசு அறிவிப்பு .. காளான் வளர்ப்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை
தமிழ்நாட்டில் வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்ற காளான் வகைகள் வளர்ப்பை வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வந்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வெள்ளை மொட்டுக் காளான், பால் காளான், சிப்பிக் காளான் போன்ற காளான் வகைகள் வளர்ப்பை வேளாண் சாகுபடியின் கீழ் கொண்டு வந்து அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, உண்ணக்கூடிய காளான் வகைகளின் வளர்ப்பு வேளாண் செயல்பாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிலமற்ற விவசாயிகளும் காளான் வளர்ப்பில் ஈடுபட்டிருப்பதை கருத்தில் கொண்டும், விவசாயிகள், காளான் வளர்ப்போர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

