பெங்களூருவில் உள்ள பன்னார்கட்டா உயிரியல் பூங்காவில், Feline panleukopenia என்ற வைரஸ் நோய் தாக்கி, ஏழு சிறுத்தை குட்டிகள் உயிரிழந்தன. Feline parvovirus என்ற வைரசால் பரவுகிற இந்த நோய் சிறுத்தைக் குட்டிகளை தீவிரமாக தாக்கும் என பூங்கா விலங்கியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். முதலாவது நோய் தொற்று கடந்த மாதம் 22 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டதாகவும், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பிறகும், மூன்று முதல் எட்டு மாதம் வயதுள்ள இந்த சிறுத்தை குட்டிகள் இறந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ள பன்னார்கட்டா உயிரியல் பூங்கா இயக்குநர் சூர்யா சென், கடந்த 15 நாட்களாக இதன் காரணமாக எந்த விலங்கும் இறக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இந்தியா
00 Comments
Leave a comment