Big Stories

கிரிவலம் சுற்றி அருணாச்சலேஸ்வரர் அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள 14
கிலோமீட்டர் மலையை சுற்றி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே கிரிவலம் செல்லும்
அண்ணாமலையார்......

கிரிவலப் பாதையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.......

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திரு கார்த்திகை தீபத் திருவிழா
கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெற்ற
திருவிழாவின் நிறைவாக 26-ம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய
நிகழ்வான மகா தீபம் 2668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது.

மகாதீபம் முடிந்ததை தொடர்ந்து இறைவனை கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்
பாலிப்பது வழக்கம்.

இன்று கிரிவலம் சென்ற உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன்,
எல்லை காவல் தெய்வமான துர்க்கை அம்மன், அலங்கார ரூபத்தில் எழுந்தருளி கிரிவலம்
வந்தனர்.

இரவு ஏழு முப்பது மணிக்கு மேல் மீண்டும் கோவிலை வந்தடையும்.

கிரிவல பாதையில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் சிலர் மாட்டு வண்டிகள் சென்று அஷ்ட லிங்கங்களையும் வழிபட்டனர்.

ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே அண்ணாமலையார் கிரிவலம் வருவார்.

ஆண்டுதோறும் தை மாதத்தில் திருவூடல் முடிந்ததும் அண்ணாமலையார் கிரிவலம்
வருவார்.

அதனைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தில் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்ட
இரண்டாம் நாள் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் என்பது
குறிப்பிடத்தக்கது

கிரிவலம் சுற்றி அருணாச்சலேஸ்வரர்  அரோகரா முழக்கத்துடன் தரிசனம் செய்த பக்தர்கள்

00 Comments

Leave a comment