news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விரட்டும் வெறி நாய்கள்...
tv

Also Watch

tv

Read this

விரட்டும் வெறி நாய்கள்...

திருவாரூர்

43

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
நாய் மெயின்

முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட அணைத்து வார்டு பகுதிகளில் நீண்ட காலமாக நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் நகரம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாய்கள் கடைத்தெரு மற்றும் குடியிருப்புகளின் தெருக்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது.

வெறி பிடித்து காணப்படும் நாய்கள்
வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்பி அதனால் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அடிக்கடி டூவிலர்களில் செல்பவர்களை குறுக்கே வரும் நாய்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் நாய்களின் சில வெறி பிடித்து காணப்பட்டதால் ஏராளமான மாடுகள், ஆடுகளை கடித்து குதறி சாகடித்து வருகிறது.
நகரில் சுற்றித்திரியும் நோய்வாய்ப்பட்ட நாய்கள்
அதேபோல் ஏராளமான நோய்வாய்ப்பட்ட நாய்கள் நகரில் சுற்றி திரிகிறது இதனால் மக்களுக்கு பல்வேறு வியாதிகளை பரப்பும் அபாயமும் உள்ளது. சமீபத்தில் கூட குழந்தைகளை நாய்கள் துரத்தி காயப்படுத்திய சம்பவமும் அதேபோல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நாய்கள் சீண்டிய சம்பவங்களும் இப்பகுதியில் நிறைய நடந்துள்ளது. இதனால் நாளுக்கு நாள் நாய்களின் தொல்லையால் முத்துப்பேட்டை மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

நாய்களை பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை
இப்படி தொடர்ச்சியாக சிறுவர்களையும் பொது மக்களையும் அச்சுறுத்தி வரும் நாய்களை பேரூராட்சி நிர்வாகம் இனியும் காலதாமதம் ஏற்ப்படுத்தாமல் பிடித்து அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட சின்னக்கட்சி மரைக்காயர் தெரு பகுதியில் நேற்று நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டை பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றி வளைத்து கடித்து குதறியது. இந்த பதபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பொதுமக்க்ளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


Related Link
கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி தீவிரம்

கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி தீவிரம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மக்களவையில் பிரதமர் மோடி உரை

6
11 mins agoshare
மக்களவையில் பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved