Also Watch
Read this
மக்களவையில் மூன்று மசோதாக்கள் தாக்கல் ஆன நிலையில், பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
அரசியல் சாசன திருத்தம் 131-வது திருத்தம் மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய மூன்று மசோதாக்கள் மக்களவையில் இன்று, ஏப்ரல் 16ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டன. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்து, மசோதாக்களை அறிமுகம் செய்தார். முன்னதாக இந்த மசோதா தாக்கலுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 251 வாக்குகளும் எதிராக 185 வாக்குகளும் பதிவாகின. ஆதரவு அதிகம் இருந்ததால், மசோதாக்களை தாக்கல் செய்ய சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி வழங்கினார். இதையடுத்து மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அரசியலமைப்புத் திருத்த மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய இரண்டு மசோதாக்களை அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தார். யூனியன் பிரதேசங்களுக்கான சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.
தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஒம் பிர்லா, “இந்த மூன்று மசோதாக்கள் மீதான விவாதம் 15 முதல் 18 மணி நேரம் வரை நடைபெறும். இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்” என தெரிவித்தார். இந்நிலையில், பிற்பகல் 3 மணிக்கு, தமது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.
தேசத்தின் முக்கிய தருணம்
பிரதமர் மோடி பேசும்போது, மக்கள் தொகையில் சரிபாதியாக உள்ள பெண்களுக்கு அதிகாரமளிக்க வேண்டும், மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் தேசத்தின் முக்கிய தருணத்தில் நானும் உடனிருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன், என்று கூறினார்.
மகளிருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட 3 மசோதாக்கள் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.