Also Watch
Read this
By: Manigandan Raja

ராமநாதபுரத்தில் இருந்து சிக்கல் வழியாக முதுகுளத்தூர் செல்லும் அரசு பேருந்து 50க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு முதுகுளத்தூர் நோக்கி வந்த பொழுது கீழச்சாக்குளம் என்ற இடத்தில் திடீரென பேருந்தின் முன்பக்க வலது புறத்தில் உள்ள டயர் வெடித்ததால் நடுவழியில் பேருந்து நின்றது
இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அரை மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்களை அத்தியாவசிய பணிக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனை எடுத்து அந்த வழியாக வந்த மாற்று பேருந்தில் பயணிகளை முதுகுளத்தூருக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல் அடிக்கடி அரசு பேருந்து பஞ்சராவதும் டயர் வெடித்து நடுவழியில் நிற்பதும் கேலிக்கூத்தாக உள்ளது. இது போன்று விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.