Also Watch
Read this
By: Manigandan Raja

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள செவல்குளம் பகுதியில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது இந்நிகழ்வில் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
அப்போது, முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில் ஆ ராசா எம்பி முதல்வர் ஜோசப் விஜய் குறித்து ராஜாஜியும் அண்ணாவும் அமர்ந்திருந்த முதலமைச்சர் நாற்காலியில் இன்று நாதாரி முதலமைச்சர் அமர்ந்திருக்கிறார் என்ற சர்ச்சைக்குரிய விமர்சனம் குறித்த கேள்விக்கு மதிமுக தலைமை நிலைய செயலாளரும் எம்பியுமான துரை வைகோ இது விரிவாக்கமாக பேசக்கூடிய ஒன்று என்றும் நாகரீகமற்ற பேச்சு என்றும் அரசியல் எல்லைகளைக் கடந்து வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.