Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள் கடன் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியதை அடுத்து 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே தற்போது தள்ளுபடி செய்துள்ளதாகவும் உண்மைக்கு புறம்பாக முதலமைச்சர் செயல் படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
மேகதாது அணை தொடர்பாக புதிய நடுவர் மன்றம் அமைக்கப்படும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைத்திருக்கும் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும்.

நூதன முறையில் கண்களில் கருப்பு துணி கட்டி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். கடன் தள்ளுபடியில் பாரபட்சம் இருப்பதால் அதனை சுட்டிக்காட்டும் நோக்கத்தில் கண்களில் கருப்பு துணி கட்டி விவசாயிகளின் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக தமிழ்நாடு காவிரி பாதுகாப்பு உழவர் சங்க செயலர் சுவாமிமலை விமல் நாதன் தெரிவித்தார்.