news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தார்சாலை போடாததால் பொதுமக்கள் அவதி
tv

Also Watch

tv

Read this

தார்சாலை போடாததால் பொதுமக்கள் அவதி

ஆண்டிப்பட்டி,தேனி

6

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
தார்சாலை

ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூரில் இருந்து ஸ்ரீரங்கபுரம் செல்லும் இணைப்புச் சாலையில் கடந்த மூன்று மாத காலமாக தார் சாலை போடப்படாததால் வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ள நிலை உள்ளதால் விவசாயிகள் பொதுமக்கள் வேதனை.

நிதி ஒதுக்கீட்டிற்கு மேல் சாலை போடும் தார் விலை அதிகமாகி விட்டதால் சாலை போடப்படவில்லை என்று அலட்சியமாக பதில் கூறும் ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர்.
உரிய நடவடிக்கை எடுத்து தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது ரங்கசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ள ஜம்புலிப்புத்தூரிலிருந்து ஸ்ரீரங்க புரம் வரை உள்ள பகுதிகளில் வாழை பருத்தி மிளகாய் போன்ற பல்வேறு வகை விவசாய விளைநிலங்கள் உள்ளதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இணைப்புச் சாலை உருவாக்கப்பட்டு ரூபாய் ஒரு கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை உருவாக்குவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது .

இப்பகுதியில் விவசாயிகள் உற்பத்தி பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் விவசாயத் தோட்டத்திற்கு செல்லும் இருசக்கர வாகனங்கள் பொதுமக்களும் இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

கடந்த 8 மாத காலங்களுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் ஜம்புலிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கபுரம் வரை சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு ஜல்லிக்கட்டு மட்டுமே பரப்பப்பட்ட நிலையில் சாலை அமைப்பு பணி நின்றுபோனது.


அரைகுறையாக பணி நடைபெற்ற சாலையில் தார் சாலை அமைக்கும் பணி முழுமை பெறாததால் இப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் விவசாயிகள் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஜல்லி கற்கள் மட்டுமே பரப்பு உள்ள நிலையில் வாகனங்களை பாதுகாப்பாக ஓட்டு செல்ல முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த சாலையில் செல்ல முடியாமல் விபத்து ஏற்படும் அவல நிலை உள்ளது.

இரவு நேரங்களில் இப்பகுதியில் செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகிறது. இதனால் இப்பகுதியில் தார் சாலை அமைக்கும்படி பொதுமக்கள் விவசாயிகள் பலமுறை
கோரிக்கை விடுத்தும் ஊராட்சி ஒன்றியம் அலட்சியப் போக்கை கடைப்பிடித்து விடுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய உதவி செயற்பொறியாளர் நாகராஜன் என்பவரிடம் விளக்கம் கேட்ட பொழுது நிதி ஒதுக்கி மூன்று மாத காலமான நிலையில் சாலை போட பயன்படுத்தப்படும் தார் விலை அதிகமானதால் தார் சாலை போட முடியவில்லை என்று அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு கோடியே 22 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிலையில் இது போன்ற பதில் பொதுமக்களிடையே அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஆரம்பத்திலேயே ஆறுச்சாலை அமைப்பதற்கு திட்டமிட்டு தான் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் திடீரென்று எப்படி தாரின் விலை உயர்வதால் நீதி பற்றவில்லை என்று கூற முடியும் என்றும் உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Link
மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கண்டனம்

மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கண்டனம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

🔴LIVE : "ரூ.75000 கோடி வட்டி.." செந்தில் பாலாஜி பரபரப்பு பிரஸ்மீட்

10
31 mins agoshare
Senthil balaji1button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau