தமிழ்நாடு

சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுவதாக புகார் நகராட்சி பணம் வீணடிப்பதாக திமுக வார்டு உறுப்பினர் குற்றச்சாட்டு

நல்ல நிலையில் உள்ள தார் சாலைகளை போடுவதும் மக்கள் அதிக பயன்படுத்தும் மோசமான
சாலைகளை தரமற்ற சாலைகளாக போடப்படுவதால் நகராட்சி பணம் வீணடிக்கப்படுவதாக
திமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு...

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகரமன்ற கூட்டரங்கில்
நடைபெற்றது. கூட்டம் துவங்கியதுமே முதலில் பேச துவங்கிய 14 வது வார்டு
கவுன்சிலர் ஜார்ஜ், நகராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டில் நன்றாக இருந்த சாலை
தேவை இல்லாமல் போடப்பட்டுள்ளதாக பேச துவங்கினார். இதற்க்கு சாட்சியாக சாலை
போடுவதற்கு முன் இருந்த புகைப்படத்தை காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதை
கேட்ட 8 வது வார்டு அதிமுக கவுன்சிலர் லயோலா குமார் தன பங்குக்கு புகைப்படத்தை
பிரிண்ட் எடுத்து காட்ட இதை எல்லாம் மீறி 2 வார்டு திமுக கவுசிலர் தன்
பங்குக்கு மற்றுமொரு புகைப்படத்தை எடுத்து காட்டி 8 வது வார்டை தாண்டி
தன்னுடைய வார்டு இருப்பதாகவும் அங்கு சாலை மோசமாக இருப்பதாகவும் அப்படி
இருக்கையில் தன் வார்டுக்கு சாலை அமைத்து தராமல் நன்றாக சாலை இருந்த 8 வது
வார்டில் சாலை அமைப்பதற்கு என்ன அவசியம் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டார்.
இதையெல்லாம் கேட்டு கடுப்பான ஆணையாளர் ஏகராஜ் AE கேள்வி கேட்க அவரோ அந்த சாலை
போட்டு ரொம்ப நாள் ஆச்சு சார் அதுனால தான் போட்டோம் என கூறியது ஆணையாளரை
அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இது இப்படி இருக்க சாலை போட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது பெரும் அதிர்ச்சி
தான் காத்திருந்தது. நன்றாக இருந்த சாலை மேல் பெயரளவுக்கு தார்கலவை ஊற்றி சாலை
அமைத்துள்ளனர். சாலை போடப்பட்டதாக கூறப்படும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு
முன் போடபட்ட சாலை தரமில்லாததால் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக
இருக்க அதில் வந்த இரு சக்கர ஓட்டிகள் கீழே விழுந்துள்ளார்.
இந்நிலையில் தார்ச்சாலை பணிகளுக்காக ஜல்லி கலவை, தாரின் அளவு ஆகியவை
குறைக்கப்பட்டதால் கையில் அள்ளினால் சாலை பெயர்ந்து வரும் அளவிற்கு தரம்
இல்லாமல் அவசர அவசரமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது திமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் ஜார்ஜ் பேசும்போது, எவ்வித
சேதமும் இல்லாமல் தனியார் பங்களாவிற்கு செல்லும் நல்ல நிலையில் உள்ள தார்
சாலைகளை போடுவதும், மக்கள் அதிக பயன்படுத்தும் மோசமான சாலைகளை தரமற்ற சாலைகளாக
போடப்படுவதால் நகராட்சி பணம் பல லட்சக்கணக்கில் வீணடிக்கப்படுவதாகவும்,
திமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் குற்றம் சாட்டினார்.

தரமில்லாமல் போடப்பட்ட சாலையைப் பற்றி ஒப்பந்த தாரர் முரளி அண்ட் கோ
உரிமையாளர்களிடம் கேட்டபோது சாலையை பற்றி உனக்கு என்ன தெரியும் மழை காலத்தில்
சாலை யார் போட்டாலும் இப்படி தான் இருக்கும் வேண்டுமானால் செய்தியை போட்டுக்கோ
என கூறினார்.

இதை பட் நகராட்சி பொறியாளரிடம் கேட்டபோது ஒரு சின்ன தவறுதல் நடந்து விட்டது
நான் உடனடியாக சாலைக்கு மேல் இன்னொரு பேட்ச் வொர்க் பண்ண சொல்றேன்னு சொல்லி
தவறை மறைக்க ஒப்பந்த தாரரிடம் சொல்லி பேட்ச் வொர்க் பார்க்க செய்துள்ளார்.

எது எப்படியோ உதகை நகராட்சியின் தவறான செயல்களால் பல கோடி ரூபாய் மக்களின்
வரிப்பணம் வீணாகி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சாலைகள் தரமற்ற முறையில் போடப்படுவதாக புகார்  நகராட்சி பணம் வீணடிப்பதாக திமுக வார்டு உறுப்பினர் குற்றச்சாட்டு

00 Comments

Leave a comment