தமிழ்நாடு

கழுவெளி சரணாலயத்தில் குவியும் வெளிநாட்டு பறவைகள்..ரம்மியமாக காட்சியளிக்கும் கழுவெளி சரணாலயம்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கழுவெளி சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருவதால், ரம்மியமாக காட்சி தருகின்றன. பொதுவாக செப்டம்பா், அக்டோபர் மாதங்கள் பறவைகளின் இனப்பெருக்க காலமாக உள்ள நிலையில், கழுவெளி சதுப்பு நிலப்பகுதியை சுற்றியுள்ள ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளும் தற்போது நிரம்பி காணப்படுகின்றன. இந்நிலையில் சீனா, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து கூழக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, அழுவா மூக்கான், செந்நாரை, பாம்பு கழுத்து நாரை, உள்ளான், சாம்பல் நாரை என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்துள்ளன. இவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

00 Comments

Leave a comment