தமிழ்நாடு

காதல் திருமணம் செய்த புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.!

காதல் திருமணம் செய்த புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை.!

ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம் கிராமத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் இரண்டே மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கணபதிபாளையத்தைச் சேர்ந்த யுவராஜ் - மீனா ஆகியோர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். யுவராஜ் வீட்டில் வசித்து வந்த மீனா வியாழக்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மீனாவின் குடும்பத்தினர், உடலை வாங்க மறுத்து கணவர் யுவராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்து விசாரிக்கக் கோரி மாவட்ட எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

00 Comments

Leave a comment