தமிழ்நாடு

பஞ்சாயத்து பெண் தலைவர் திடீர் தர்ணா....ஊராட்சி உறுப்பினர் ஒருமையில் பேசியதால் அதிர்ச்சி

நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி ஊராட்சி உறுப்பினர் தகாத வார்த்தையில் பேசியதாக பஞ்சாயத்து பெண் தலைவர்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். முட்டாஞ்செட்டி அதிமுக பஞ்சாயத்து தலைவர் கமலபிரியா. குடிநீர் பிரச்சினை குறித்து கிராம மக்கள் கமலா பிரியாவிடம் முறையிட்டதாகவும், அங்கு வந்த 4-வது வார்டு உறுப்பினர் காங்கிரசை சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவரை பார்த்து ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கமலா பிரியா பஞ்சாயத்து அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனுவை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

00 Comments

Leave a comment