தமிழ்நாடு

ஆர்.டி.சி. பேருந்தில் இருக்கைக்காக ஏற்பட்ட மோதல்

ஆர்.டி.சி. பேருந்தில் இருக்கைக்காக ஏற்பட்ட மோதல்

தெலுங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தில் ஆர்.டி.சி. பேருந்தில் மனைவிகளின் இருக்கைக்காக கணவர்கள் அடித்துக்கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. தோரூரில் இருந்து உப்பல் எக்ஸ் ரோடுக்கு புறப்பட்ட பேருந்தில் ஏராளமானோர் தங்களது கை குட்டையை போட்டு இடம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு பெண்ணின் இடத்தை வேறொரு பெண் ஆக்கிரமித்ததால் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு பெண்களும் மோதிக்கொண்ட நிலையில், அவர்களது கணவர்களும் ஒருவரை ஒருவர் செருப்பால் அடித்துக்கொண்டனர். இதையடுத்து பேருந்து நடத்துனர் அளித்த புகாரில், இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து சென்றனர்.

00 Comments

Leave a comment